\
நவீன ராக்கெட் மூலம் ஆயுத சோதனை : வடகொரியா விளக்கம்

நவீன ராக்கெட் மூலம் ஆயுத சோதனை : வடகொரியா விளக்கம்

நவீன ராக்கெட் மூலம் ஆயுத சோதனை : வடகொரியா விளக்கம்
Published on

நவீன ராக்கெட் மூலம் தற்காப்பு பயிற்சிக்காக துல்லிய சோதனை நடத்தப்பட்டதாக வடகொரியா தெரிவித்துள்ளது. 

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் இடையேயான பேச்சுவார்த்தை பாதியிலேயே நிறைவடைந்துள்ள நிலையில் நவீன ராக்கெட் மூலம் தற்காப்பு பயிற்சிக்காக துல்லிய சோதனையை வடகொரியா  நடத்தியுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் விதித்த பொருளாதார தடைகளை மீறியும், உலக நாடுகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் வட கொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் சோதித்து வந்தது. 

இது அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே பகையை ஏற்படுத்திவந்த நிலையில் அமரிக்க அதிபர் ட்ரம்பும், வடகொரிய அதிபர் கிம்மும் கடந்த ஜூன் மாதம் சந்தித்து பேசினர். அதன்பின் வடகொரியா அணு ஆயுத சோதனைகளை கைவிடுவதாக ஒப்புதல் அளித்தது. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் ட்ரம்ப்- கிம் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் வடகொரியா, கடந்த வாரம் மீண்டும் அணு ஆயுத பரிசோதனையை நடத்தி‌யது. இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்த நிலையில், தற்காப்புக்காக நடத்தப்பட்ட அணு ஆயுத பயிற்சிதான் என வடகொரியா விளக்கம் அளித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com