\
வடகொரியா தூதரை வெளியேற்றுகிறது ஸ்பெயின்

வடகொரியா தூதரை வெளியேற்றுகிறது ஸ்பெயின்

வடகொரியா தூதரை வெளியேற்றுகிறது ஸ்பெயின்
Published on

வடகொரியா தூதர் இம்மாத இறுதிக்குள் தங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என ஸ்பெயின் உத்தரவிட்டுள்ளது.

சர்வதேச நாடுகளின் கோரிக்கைகளை மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது. ‌இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக வடகொரியாவின் தூதர்களை தங்கள் நாட்டில் உள்ள தூதரகத்தில் இருந்து பல்வேறு நாடுகள் வெளியேற்றி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது ஸ்பெயின் நாடும் வடகொரியா தூதரை தங்கள் நாட்டை விட்டு செல்லும்படி உத்தரவிட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் அவர் வெளியேற வேண்டும் என்றும் கெடு விதித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com