வடகொரியா: வெள்ளம் பாதித்த பகுதிகளில் கிம் ஜாங் உன் நேரில் ஆய்வு! புகைப்படங்கள் வெளியீடு

ஏவுகணைச் சோதனைகளால் அறியப்பட்ட வடகொரிய அதிபர் கிம்ஜான் உன், வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்தது குறித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி, கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்து வருகிறது. அதிபர் கிம் ஜான் உன் மேற்பார்வையில் இந்தச் சோதனைகள் நடத்தப்படும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டில் வெள்ளம் பாதித்த பகுதிகளில், கிம் ஜான் உன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

முழங்கால் அளவுக்கு நீர் சூழ்ந்த பகுதியில் இறங்கி அதிகாரிகளுடன் கிம் ஜான் உன் ஆய்வு செய்த புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com