வடகொரிய அதிபர் கிம் ஜாங் உடனான பேச்சுவார்த்தை பயனளிக்கவில்லை என்றால் வெளிநடப்பு செய்ய இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் இருவரும் ஜூன் மாதம் சந்தித்து பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அணுசக்தி பயன்பாட்டை முழுமையாக நீக்க வடகொரியா ஒப்புக் கொள்ளும் வரை அந்நாட்டுக்கு அதிகப்படியான அழுத்தம் கொடுக்கப்படும் என ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்து இருக்கும் நிலையில் வடகொரியா அணு ஆயுத பயன்பாட்டை முழுமையாக நீக்கிவிட்டால், அந்த நாட்டுக்கு மட்டுமல்லாமல் உலகிற்கு சிறந்த நாளாக அமையும் என ட்ரம்ப் தெரிவித்தார். மேலும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உடனான பேச்சுவார்த்தை பயனளிக்கவில்லை என்றால் வெளிநடப்பு செய்ய இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.