வடகொரியாவில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று அமெரிக்கா கோரவில்லை என்றும், வடகொரியா தங்களின் எதிரி நாடு அல்ல என்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வடகொரியாவில் போர் நடத்துவதற்கு ஏதாவது காரணம் கிடைக்குமா என்று அமெரிக்கா காத்திருக்கவில்லை என்று கூறினார். வடகொரியா அமெரிக்காவின் எதிரியல்ல என்று குறிப்பிட்ட அவர், வடகொரியாவுடன் பேச்சு நடத்தி பிரச்னைகளுக்குத் தீர்வுகாண வேண்டும் என்றே அமெரிக்கா விரும்புவதாகவும் டில்லர்சன் கூறினார்.
வடகொரியா அடுத்தடுத்து ஏவுகணைச் சோதனைகளை நடத்திய நிலையில், அமெரிக்கா ராணுவ நடவடிக்கையை எடுக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால், அதற்கு உள்நாட்டிலேயே அதிக எதிர்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.