north korea fired a ballistic missile at japan
model image x page

மீண்டும் ஏவுகணைச் சோதனையில் வடகொரியா!

சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை மேற்கொண்டுள்ளது.
Published on

வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே நீடித்து வரும் எல்லைப் பிரச்னையில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. உலக நாடுகளின் எதிர்ப்பை மீறியும் வடகொரியா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் அந்நாட்டுக்கு பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகளால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

என்றாலும் அதிலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. வடகொரியா இந்த அளவிற்கு ஏவுகணைச் சோதனைகளில் ஈடுபடுவதற்கு மிக முக்கியமான காரணமே, தென்கொரிய நாடானது அமெரிக்காவுடன் இணைந்து போர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதுதான்.

north korea fired a ballistic missile at japan

இந்த நிலையில், புத்தாண்டு பிறந்து சில தினங்களிலேயே வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை மேற்கொண்டிருப்பது உலகில் பரபரப்பைக் கூட்டியுள்ளது. வடகொரியா செலுத்திய அந்த ஏவுகணை, ஜப்பான் கடற்கரைப் பகுதிக்கு அருகே சென்று விழுந்ததாக அந்நாட்டு ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். எ

னினும், எந்தப் பகுதியில் இருந்து இந்தச் சோதனை நடத்தப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. கடந்த இரண்டு மாதங்களாக ஏவுகணைச் சோதனை நடத்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் சோதனை நடத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தென்கொரியாவுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளின்கன் வருகை தந்துள்ள நிலையில், வடகொரியா தற்போது ஏவுகணைச் சோதனையை நடத்தி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

north korea fired a ballistic missile at japan
மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை; கொரிய தீபகற்பத்தில் பதற்றம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com