உலகம்
போருக்காக ஏங்குகிறது வடகொரியா: அமெரிக்கா குற்றச்சாட்டு
போருக்காக ஏங்குகிறது வடகொரியா: அமெரிக்கா குற்றச்சாட்டு
வடகொரியா போருக்காக ஏங்கியிருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி இருக்கிறது.
இது தொடர்பாக பாதுகாப்பு அவையின் அவசரக் கூட்டத்தில் பேசிய ஐநாவுக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலே, 'அமெரிக்காவின் பொறுமைக்கும் எல்லை உண்டு. வடகொரியாவுக்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கும் புதிய தீர்மானத்தையும் அமெரிக்கா முன்வைக்க இருக்கிறது’எனத் தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை சுமார் 120 கிலோடன் ஆற்றல் கொண்ட ஹைட்ரஜன் குண்டை வடகொரியா சோதனை செய்தது. புதிய ஏவுகணைச் சோதனைகளை நடத்துவதற்கு அந்த நாடு திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

