’வடகொரியாவில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நபருக்கு முடிவு தெரியவில்லை’: WHO

’வடகொரியாவில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நபருக்கு முடிவு தெரியவில்லை’: WHO

’வடகொரியாவில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நபருக்கு முடிவு தெரியவில்லை’: WHO
Published on

வடகொரியாவில் முதல் நபராக ஒருவருக்கு சந்தேகத்தின் பெயரில் கொரோனா தொற்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அவருக்கு சோதனை முடிவுகளை தெரியவில்லை. அவருடன் முதல் கட்டம் மற்றும் இரண்டாவது கட்டத்தில் தொடர்பில் இருந்த 3,635 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜூலை 26 ஆம் தேதி முதல் எல்லைப்புற நகரமான கேஸாங் பகுதியில் அவசர நிலையும் ஊரடங்கும் அறிவிக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தென்கொரியா சென்ற ஒருவர், தற்போது எல்லை வழியாக திரும்பும்போது பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் இருந்தது.

முதல் கொரோனா தொற்று இருப்பது பற்றிய செய்திகளை சந்தேகத்துடன் வடகொரியா ஊடகங்கள் வெளியிட்டுவரும் நிலையில், அதிபர் கிம் ஜோங்க் உன், "கொடிய வைரஸ் நாட்டுக்குள் நுழைந்ததாகக் கூறலாம்" என்று அறிவித்துள்ளார். அந்த தகவல் உண்மையானால், அதுதான் அதிகாரிகளால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் முதல் கொரோனா தொற்றாக இருக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com