"அச்சுறுத்தல் அற்ற இந்திய, பசிபிக் கடல் பிராந்தியம்" - குவாட் அமைப்பு

"அச்சுறுத்தல் அற்ற இந்திய, பசிபிக் கடல் பிராந்தியம்" - குவாட் அமைப்பு
"அச்சுறுத்தல் அற்ற இந்திய, பசிபிக் கடல் பிராந்தியம்" - குவாட் அமைப்பு

அச்சுறுத்தல்கள் அற்ற பகுதியாக இந்திய மற்றும் பசிபிக் கடலை பராமரிக்க குவாட் அமைப்பு முடிவு செய்துள்ளது 

இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தை அச்சுறுத்தல்கள் அற்ற பகுதியாக பராமரிக்க பாடுபடுவது என இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் கொண்ட குவாட் அமைப்பு முடிவெடுத்துள்ளது. இப்பிராந்தியத்தில் சீன ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது

குவாட் அமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் நடைபெற்றது. இதில், பிற நாடுகளை தாக்குவதற்கோ அல்லது மிரட்டுவதற்கோ ஆப்கானிஸ்தானை ஒரு தளமாக பயன்படுத்துவதை அனுமதிக்க கூடாது என முடிவெடுக்கப்பட்டது.

இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கன், உக்ரைனை தாக்கினால் மோசமான பின்விளைவுகளை சந்திக்கவேண்டியிருக்கும் என ரஷ்யாவிற்கு எச்சரிக்கை விடுத்தார். எனினும் இதன் பின் ரஷ்யாவை எச்சரிக்கும் வகையில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் அமெரிக்க, ஜப்பான், ஆஸ்திரேலிய அமைச்சர்கள் பெயர்கள் மட்டுமே இருந்தன. இந்திய அமைச்சர் ஜெய்சங்கர் அதில் கையெழுத்திடவில்லை. இதற்கிடையே குவாட் அமைப்பு தங்களின் வளர்ச்சியை தடுக்கும் வகையிலும் சச்சரவுகளை தூண்டும் வகையிலும் இருப்பதாக சீனா விமர்சித்துள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com