காற்றில் கலந்து மனைவிக்கு விடுதலை வாங்கித்தந்த புரட்சியாளர் லியு

காற்றில் கலந்து மனைவிக்கு விடுதலை வாங்கித்தந்த புரட்சியாளர் லியு

காற்றில் கலந்து மனைவிக்கு விடுதலை வாங்கித்தந்த புரட்சியாளர் லியு
Published on

நோபல் பரிசு பெற்ற சீன புரட்சியாளர் லியு சியாபோவின் உடல் தகனம் செய்யப்பட்ட நிலையில், அவரின் மனைவி வீட்டு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

ஷென்யாங் நகரிலுள்ள சீன மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனையில் ஈரல் புற்றுநோய் முற்றிய கட்டத்தில் கடந்த மே மாதம் அனுமதிக்கப்பட்டிருந்த லியு சியாபோவுக்கு தீவிர சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 13ம் தேதி காலமானார். அவரின் இறுதிச் சடங்குகள் இன்று நிறைவடைந்த நிலையில், கடந்த பல வருடங்களாக வீட்டு சிறையிலிருந்த அவரின் மனைவி தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். சீனாவில் ஜனநாயகம் தொடர்பான ‘சார்ட்டெர் 8’ என்ற நூலை கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியிட்ட காரணத்துக்காக அந்நாட்டின் பிரபல எழுத்தாளரான லியு சியாபோ என்பவருக்கு சீன அரசு 11 வருட சிறைத் தண்டனையை அந்நாடு விதித்தது. கடந்த 2010-ம் ஆண்டு அவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. நீண்ட நாள் சிறையில் தவித்து வந்த லியு, ஈரல் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் அவரை அந்நாட்டு அரசு பரோலில் விடுவித்தது. வெளி வந்த சில நாட்களில் அவர் மரணமடைந்துவிட்ட நிலையில், அவரின் இறுதி சடங்கில் கூட பங்கேற்க நோபல் பரிசு வழங்கும் குழுவின் தலைவருக்கு சீன அரசு அனுமதியளிக்கவில்லை. நூலை வெளியிட்டதால் மனைவியை நீண்ட நாட்கள் வீட்டு சிறைக்குள் அடைத்து வைக்க காரணமான புரட்சியாளர் லியு, தற்போது அவரது உயிரை விட்டு மனைவியை வீட்டு சிறையிலிருந்து மீட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com