உலகம்
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு அறிவிப்பு
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு அறிவிப்பு
2018ஆம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசை வில்லியம் நார்தாஸ் மற்றும் பால் ரோமர் ஆகிய இருவரும் பெற்றுள்ளனர். பருவநிலை மாற்றத்துடன் தொடர்புடைய பொருளாதார ஆய்வுக்காக இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்கரான வில்லியம் நார்தரஸ், யாலே பல்கலைக்கழகத்தில் படித்தவர். இவர் பருவநிலை மாற்றத்தால் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்துள்ளார். பால் ரோமர் உலக வங்கையின் தலைமை பொருளாதார நிபுணராக உள்ளார். அமெரிக்காவின் கொலொரடோவை சேர்ந்த இவர் வளமான பொருளாதாரத்தை எப்படி பொருளாதார நிபுணர்கள் வளர்ப்பது? என்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

