நாளை அறிவிக்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு.. ட்ரம்ப்புக்கு வாய்ப்பா?
அமைதிக்கான நோபல் விருது நாளை அறிவிக்கப்பட உள்ள நிலையில் அது அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு கிடைக்குமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்தாண்டுக்கான விருதுக்கு 338 பேர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. நார்வே நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட 5 பேர் கொண்ட குழு விருதுக்குரியவரை தேர்வு செய்கிறது.
அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்படவேண்டும் என விதியை 1895ஆம் ஆண்டு ஸ்வீடன் தொழிலதிபர் ஆல்ஃப்ரட் நோபல் வகுத்து வைத்துள்ளார். ஒவ்வொரு ஆண்டுக்கான விருதுக்கும் விண்ணப்பங்கள் ஜனவரி 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
பாகிஸ்தான், இஸ்ரேல், கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ட்ரம்ப் பெயரை பரிந்துரைத்துள்ளனர். ஆனால் இப்பரிந்துரை ஜனவரி 31க்கு பிறகே அளிக்கப்பட்டுள்ளதால் இந்தாண்டுக்கான விருதுக்கு ட்ரம்ப் தகுதி படைத்தவர் அல்லர். வீிதிகள்படி அடுத்தாண்டுதான் அவரது பெயர் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். எனினும் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டால் வேண்டுமானால் ட்ரம்ப்பின் பெயரை இந்தாண்டுக்கான விருதுக்கு பரிசீலிக்கலாம். ட்ரம்ப்பின் பெயரை இந்தாண்டே பரிசீலிக்கலாம் என்று நிபுணர்கள் சிலர் கூறி வருகின்றனர். வியக்கத்தக்க வகையில் ட்ரம்ப் பெயர் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விருதும் அறிவிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. அமைதிக்கான நோபல் விருது என்பதும் பதக்கம் சான்று மற்றம் 10 கோடி ரூபாய் பரிசுத் தொகை கொண்டதாகும்.