\
Hormuz
HormuzReuters

'NO US Ships' - ஹார்முஸில் அமெரிக்காவை முழுவதுமாக முடக்கிய ஈரான்!

எண்ணெய் போக்குவரத்துக்கு தடையிட்டு அதிரடி நடவடிக்கையில் ஈரான் ஈடுபட்டுள்ளது.
Published on: 
Summary

மத்திய கிழக்கில் ஹார்முஸ் நீரிணையில் ஈரான் கடுமையான கடல்சார் கட்டுப்பாடுகளை விதித்து, அமெரிக்க ஆதரவுடன் செயல்பட்ட கப்பல்களை நிறுத்தியதுடன், எண்ணெய் போக்குவரத்தையும் முடக்கியுள்ளது. இதனால் சர்வதேச கப்பல் போக்குவரத்து பெரும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது.

செய்தியாளர் - M.மீரா

மத்திய கிழக்கில் நிலவும் தீவிரப் போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) வணிகக் கப்பல்கள் கடல் கண்ணிவெடிகளில் (Naval Mines) சிக்கி பெரும் சேதமடைந்துள்ளன.

ஈரான் விதித்துள்ள கடல்சார் கட்டுப்பாடுகளை மீறி, ரேடார் மற்றும் வழிகாட்டு அமைப்புகளை (Navigation Systems) அணைத்துவிட்டு அமெரிக்க ஆதரவுடன் ரகசியப் பாதைகளில் பயணிக்க முயன்ற பல கச்சா எண்ணெய் சரக்குக் கப்பல்கள் அடுத்தடுத்து கண்ணிவெடிகளில் மோதி தீக்கிரையாகியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது. இதில் சுமார் 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற சூப்பர் டேங்கர் கப்பல்களும் அடங்கும்.

IRGC
IRGCreuters

கண்ணிவெடி விபத்துகளால் பல கப்பல்கள் கடலிலேயே செயலிழந்து மிதக்கின்றன. எனினும், இந்த விபத்துகளில் சிக்கிய மாலுமிகள் பெரும்பாலானோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். சர்வதேச விதிமுறைகளை மீறும் கப்பல்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்கும் என ஈரான் எச்சரித்துள்ளதால், இப்பகுதியில் சர்வதேச கப்பல் போக்குவரத்து பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில் ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெற்கு ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் இருந்த எதிரி நாடுகளின் வழிகாட்டி கருவிகளை (Navigation tools) அழித்துவிட்டதாக ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் கடற்படை (IRGC) தெரிவித்துள்ளது. மேலும், அனுமதியின்றி எந்தக் கப்பலும் அந்தப் பாதைக்குள் நுழைய முடியவில்லை என்றும், தெற்கு வழியாக நடைபெறும் எண்ணெய் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஈரான் கூறியுள்ளது.

hormuz
hormuzreuters

ஈரான் அரசு ஊடகத்திடம் பேசிய IRGC கடற்படை அதிகாரி ஒருவர், தெற்கு ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் உள்ள பாறைகளில் அமைக்கப்பட்டிருந்த வழிகாட்டி கருவிகள் அழிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்கக் கடற்படையின் பாதுகாப்புடன் கப்பல்களுக்கு இடையே எண்ணெய் மாற்றும் நடவடிக்கைகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது அந்தப் போக்குவரத்தையும் முடக்கியுள்ளதாக ஈரான் கூறியுள்ளது. வளைகுடா நாடுகள் அமெரிக்கக் கடற்படையின் பாதுகாப்புடன் மாற்றுப் பாதைகள் மூலம் எண்ணெய் மற்றும் எரிவாயுவைக் கொண்டு சென்றுக் கொண்டிருந்தன. இதனையும் முழுவதுமாக முடக்கியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

Hormuz
பல ஆண்டுகள் மீள முடியாத அடி கொடுப்போம்! அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் Warning!