விளையாட்டு வீரர்களுக்கு தடையில்லை: அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டி
சர்வதேச விளையாட்டு வீரர்களுக்கு அமெரிக்காவினுள் நுழைய எவ்வித தடையும் இல்லை என அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டி கூறியுள்ளது.
பாதுகாப்பு கருதி ஈரான் உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தடையானது விளையாட்டு வீரர்களுக்குப் பொருந்தாது என அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டி கூறியுள்ளது. அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில், பன்னாட்டு வீரர்கள் பங்கேற்பதை உறுதி செய்யும்படி வெள்ளை மாளிகை அறிவுறுத்தியதாக அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் உலகக்கோப்பை வில்வித்தைப் போட்டி வரும் 10ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் சர்வதேச விளையாட்டு வீரர்கள் பங்கேற்பதற்கு எவ்வித தடையும் இல்லை என்றும் இப்போட்டியில் பங்கேற்கும் அணிகளில், ஈரானும் இடம் பெற்றுள்ளது என்றம் அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.