“என்எஸ்ஜியில் இந்தியாவை சேர்ப்பது பற்றி விவாதிக்கவில்லை” - சீனா

“என்எஸ்ஜியில் இந்தியாவை சேர்ப்பது பற்றி விவாதிக்கவில்லை” - சீனா
“என்எஸ்ஜியில் இந்தியாவை சேர்ப்பது பற்றி விவாதிக்கவில்லை” - சீனா

என்.எஸ்.ஜி கூட்டத்தில் இந்தியாவை உறுப்பினராக ஆக்குவது குறித்து விவாதிக்கப்படவில்லை என்று சீனா தெரிவித்துள்ளது. 

அணுசக்தி வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் அமைப்பான என்.எஸ்.ஜியில் மொத்தம் 48 நாடுகள் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். இந்த அமைப்பிற்கான கூட்டம் இன்று கஜகஸ்தான் நகரின் நூர்-சுல்தான் பகுதியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் உறுப்பினராக சேர்ப்பது குறித்து விவாதிக்கப்படவில்லை என்று சீனா தெரிவித்துள்ளது. அத்துடன் ‘Non Proliferation Treaty(NPT)’யில் கையெழுத்து இடாத நாடுகள் என்.எஸ்.ஜியில் சேர்வதற்கு விதிகள் வகுக்கப்பட்டதற்குப் பிறகுதான் இந்தியாவின் விண்ணப்பம் தொடர்பாக ஆலோசிக்கப்படும் எனவும் சீனா தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் லூ கங் (Lu Kang), “என்பிடி ஒப்பந்தத்தில் கையெழுத்து இடாத நாடுகளை என்.எஸ்.ஜியில் சேர்ப்பது குறித்து முதலில் விதிகள் வகுக்கப்படவேண்டும். அதற்குபின்பு தான் இந்தியாவை உறுப்பினராக்கும் விண்ணப்பம் குறித்து ஆராயமுடியும். ஏனென்றால் என்.எஸ்.ஜி அமைப்புக்கு என்று ஒருசில விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் உள்ளன. சீனா இந்த விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை எப்போதும் மதிக்கும். 

அத்துடன் என்.எஸ்.ஜியில் அனைத்து முடிவுகளும் உறுப்பு நாடுகளின் ஒப்புதலுக்கு பின்பே எடுக்கப்படும். அதனால் இந்த விவகாரத்தில் அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொள்ளும் அளவில் முடிவு எடுக்க அதிக கால அவகாசம் தேவைப்படும். மேலும் சீனா, இந்தியாவின் விண்ணப்பத்திற்கு எதிராக செயல்படவில்லை. நாங்கள் கூறுவது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒரு முடிவு எட்டப்படவேண்டும் என்பதேயாகும்” எனத் தெரிவித்துள்ளார். 

என்.எஸ்.ஜி அமைப்பில் உறுப்பினராக இந்தியா கடந்த 2016ஆம் ஆண்டு விண்ணப்பித்தது. இந்தியாவின் விண்ணப்பத்தை தொடர்ந்து பாகிஸ்தானும் உறுப்பினராக விண்ணப்பித்தது. என்.எஸ்.ஜியில் உறுப்பினராக வேண்டும் என்றால் அந்த நாடு என்பிடி ஓப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கவேண்டும். 

ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் என்பிடி ஓப்பந்தத்தில் கையெழுத்து இடவில்லை. இதனையடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் என்.எஸ்.ஜி அமைப்பில் உறுப்பினர்களாகவில்லை. என்பிடி ஓப்பந்தம் என்பது அணு ஆயுதங்கள் உலக நாடுகளில் பரவாமல் தடுப்பதற்காகவும் மற்றும் அணுசக்தியை உலக அமைதிக்காக பயன்படுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்ட ஒப்பந்தமாகும். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com