அமெரிக்க கிரீன் கார்டை இந்தியர்கள் இனி எளிமையாக பெறலாம்?

அமெரிக்க கிரீன் கார்டை இந்தியர்கள் இனி எளிமையாக பெறலாம்?
அமெரிக்க கிரீன் கார்டை இந்தியர்கள் இனி எளிமையாக பெறலாம்?

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் கிரீன் கார்டு தொடர்பான மசோதா நிறைவேறியுள்ளது. 

அமெரிக்க பிரிதிநிதிகள் சபை கடந்த புதன்கிழமை கிரீன் கார்டு தொடர்பான மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதா ஏற்கெனவே இருந்த குடியுரிமை தொடர்பான விதியை தளர்த்தும் விதமாக அமைந்துள்ளது. அதாவது அமெரிக்காவில் ஒரு நிதியாண்டில் ஒரு வெளிநாட்டு மக்களில் 7 சதவிகிதம் பேருக்கு மட்டுமே குடியுரிமை வழங்க முடியும். எனவே அமெரிக்காவில் வசிக்கும் இந்திய ஐடி நிறுவன தொழிலாளர்கள் கிரீன் கார்டு வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அத்துடன் கிரீன் கார்டு பெறுவதற்கான காலம் அதிகரித்தது. 

இந்நிலையில் இதனை மாற்றும் வகையில் இந்த மசோதா அமைந்துள்ளது. இந்த மசோதவில் ஏற்கெனவே இருந்த 7 சதவிகிதம் என்ற விதியை மாற்றி 15சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இம்மசோதாவிற்கு 435 பேர் கொண்ட பிரிநிதிகள் சபையில் 356 எம்பிக்கள் ஆதரவாக வாக்களித்தனர். 

இதனையடுத்து இந்த மசோதா நிறைவேறியது. இதனைத் தொடர்ந்து இந்த மசோதா அமெரிக்காவின் செனட் சபைக்கு அனுப்பிவைக்கப்படும். அங்கும் இந்த மசோதா நிறைவேறும் பட்சத்தில் இது அதிபர் ட்ரம்பின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அமெரிக்க அதிபர் ஒப்புதல் அளித்தால் இம் மசோதா சட்டமாகும். 

இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் ஹெச்1பி விசா வைத்துள்ள இந்தியர்களுக்கு இது சாதகமாக அமையும். அத்துடன் இந்தியர்கள் கிரீன் கார்டு பெறுவது சுலபமாகும் என்பதால் அவர்களுக்கு இது சிறப்பான சட்டமாக அமையும். 2020ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்தச் சட்டம் நிறைவேற வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கருதப்படுகிறது. 
  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com