சுவிஸ் வங்கிகளில் உரிமை கோராமல் இருக்கும் இந்தியர்களின் பணம்!

சுவிஸ் வங்கிகளில் உரிமை கோராமல் இருக்கும் இந்தியர்களின் பணம்!

சுவிஸ் வங்கிகளில் உரிமை கோராமல் இருக்கும் இந்தியர்களின் பணம்!
Published on

சுவிட்சர்லாந்து வங்கிகளில் செயல்பாடற்ற நிலையில் இருக்கும் சுமார் 10 இந்தியர்களின் வங்கிக் கணக்குகளில் இருக்கும் பணத்திற்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை என அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்து வங்கிகளில் கடந்த 1995ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவைச் சேர்ந்தவர்களின் 10 கணக்குகள் உள்பட 2 ஆயிரத்து 600 வங்கிக் கணக்குகள் செயல்பாடற்ற நிலையில் உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த கணக்குகளில் இந்திய மதிப்பில் சுமார் 320 கோடி ரூபாய் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 



கொல்கத்தா, மும்பையைச் சேர்ந்தவர்களின் தலா இரண்டு கணக்குகள், டேராடூனைச் சேர்ந்த ஒரு வங்கி கணக்கு என 10 இந்தியர்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்திற்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை எ‌ன கூறப்படுகிறது. 

இதில் பணத்தை உரிமைக் கோரு‌வதற்கான காலக்கெடு, இருவருக்கு வரும் 15-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் உரிய ஆவணங்களுடன் பணத்திற்கு உரிமை கோரவில்லையெனில் அப்பணம் சுவிட்சர்லாந்து அரசுக்கு சொந்தமானதாக மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com