அமெரிக்கா | ட்ரம்ப் பதவியேற்பு விழா.. காஞ்சிப் பட்டில் வந்து கவனத்தை ஈர்த்த நீதா அம்பானி!
அமெரிக்காவின் அடுத்த அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்பு விழாவிற்கு முன்னதாக நடைபெற்ற விருந்தில் பங்கேற்ற ரிலையன்ஸ் குழும தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி காஞ்சிபுரம் பட்டுப்புடவையில் வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். நீதாவிற்கு என பிரத்யேகமாக இந்தச் சேலையை தேசிய அளவில் விருதுபெற்ற நெசவுக்கலைஞர் கிருஷ்ணமூர்த்தி உருவாக்கியுள்ளார். இரு தலை கழுகு, மயில் உள்ளிட்ட பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் வகையிலான வடிவமைப்புகள் இந்தச் சேலையில் இடம்பெற்றுள்ளன.
நீதா அணிந்திருந்த வெல்வெட் ரவிக்கையை பிரபல ஆடை வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ரா உருவாக்கியுள்ளார். இதுதவிர மரகதம், முத்து, வைரம் போன்ற நவரத்தினங்களால் ஆன விலைமதிப்பு மிகுந்த ஆபரணங்களையும் நிதா அணிந்திருந்தார்.
இவ்விழாவில் அதிபராக பதவியேற்க உள்ள ட்ரம்ப்புக்கு முகேஷ், நீதா அம்பானி தம்பதி வாழ்த்து தெரிவித்தனர். ட்ரம்ப் பதவியேற்பு விழாவிலும் முகேஷ் - நீதா அம்பானி பங்கேற்க உள்ள நிலையில் அவர்களுக்கு மிகமிக முக்கியப் பிரமுகர்களுக்கான பகுதியில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.