உலகம்
பிரிக்ஸ் நாடுகளின் வர்த்தக மாநாடு: சீனா சென்றார் நிர்மலா சீதாராமன்
பிரிக்ஸ் நாடுகளின் வர்த்தக மாநாடு: சீனா சென்றார் நிர்மலா சீதாராமன்
சீனாவில் நடைபெறும் பிரிக்ஸ் நாடுகளின் வர்த்தகத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சீனா சென்றுள்ளார்.
பிரிக்ஸ் அமைப்பின் வர்த்தக அமைச்சர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு, சீனாவில் இன்று தொடங்குகிறது. சரக்குப் போக்குவரத்து, நிதிப்பரிமாற்றம் போன்ற பல்வேறு துறைகளில், பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என சீன வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி இறக்குமதியில் நிலவி வரும் வர்த்தகப் பற்றாக்குறை குறித்த தனது கவலையை, இந்த மாநாட்டில் இந்தியா தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.