ஒரே நேரத்தில் கர்ப்பமான அந்த 9 நர்ஸ்களுக்கும் பிறந்தது குழந்தை!

ஒரே நேரத்தில் கர்ப்பமான அந்த 9 நர்ஸ்களுக்கும் பிறந்தது குழந்தை!
ஒரே நேரத்தில் கர்ப்பமான அந்த 9 நர்ஸ்களுக்கும் பிறந்தது குழந்தை!

அமெரிக்காவில் ஒரே நேரத்தில் கர்ப்பமான 9 செவிலியர்களுக்கும் இப்போது குழந்தை பிறந்துள்ளது.

அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தில் உள்ளது போர்ட்லாண்ட் நகரம். இங்குள்ள மைன் மெடிக்கல் மையத்தில் பணியாற்றும் ஒன்பது செவிலியர்கள் ஒரே நேரத்தில் கர்ப்பமாயினர்.

அப்போது அந்த மருத்துவமனை, ‘எங்கள் மருத்துவ மையத்தின் 9 செவிலியர்கள் (போட்டோவில் 8 பேர்) ஒரே நேரத்தில் கர்ப்ப மாகியுள்ளனர். அவர்கள் தங்கள் குழந்தைகளை ஏப்ரல் மற்றும் ஜூலையில் எதிர்பார்த்துள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துகள்’’ என்று தெரிவித்து கர்ப்பத்துடன் இருக்கும் அவர்களின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தது. 

இந்தப் புகைப்படம் அப்போது அதிகம் கவனிக்கப்பட்டது.

இப்போது அந்த 9 செவிலியர்களும் மூன்று மாதத்துக்கு முன் குழந்தை பெற்றுள்ளனர். அந்த குழந்தைகளின் புகைப்படத் தையும் அதே மருத்துவ மையம், தங்கள் சமூக வலைத்தளத்தில் இப்போது வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் கவனிக்கப்பட்டு வருகிறது. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com