ஒருபுறம் உணவுப்பஞ்சம்.. மறுபுறம் மத வன்முறை.. 100-க்கும் மேற்பட்டோர் கொலை! பரிதாப நிலையில் நைஜீரியா!
ஆப்பிரிக்காவின் முக்கியமான நாடுகளில் ஒன்றான நைஜீரியா ஒருபுறம் உணவுப்பஞ்சத்தால் வாடிவரும் நிலையில், மறுபுறம் மத மோதல்களால் கொலைகள் அதிகரிக்கும் அவலம் நடந்து வருகிறது.
பரிதாப நிலையில் நைஜீரியா..
நைஜீரியாவின் மத்திய பகுதியில் இரு சமூகத்தினருக்கு இடையே மோதல்கள் நடைபெறுவது தொடர்கதையாகியுள்ளது. BASSA மாவட்டத்தில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் நூறுக்கு மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.
மறுபுறம் கடும் வறட்சி காரணமாக விளைச்சல் குறைந்துள்ளதால் உணவு தானிய பஞ்சம் நிலவுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தலைநகர் அபுஜாவில் உணவுப்பொருட்கள் விலை 2 மடங்காகிவிட்ட நிலையில் ஏழைகளுக்கு அவை எட்டாக்கனியாகிவிட்டன. அரசின் கொள்கைகள், தொடரும் வன்முறைகள், பருவநிலை மாற்றத்தின் தாக்கம் ஆகியன இந்த சூழலுக்கு காரணங்களாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.