உலகம்
வெனிசுலாவில் தேர்தல்: ஜனநாயகம் தழைத்தோங்குவதாக அதிபர் மதுரோ பெருமிதம்
வெனிசுலாவில் தேர்தல்: ஜனநாயகம் தழைத்தோங்குவதாக அதிபர் மதுரோ பெருமிதம்
வெனிசுலாவில் ஆளுநர் தேர்தல் மூலம் ஜனநாயகம் தழைத்தோங்குவதாக அதிபர் மதுரோ பெருமிதம் அடைந்துள்ளார்.
வெனிசுலாவில் 23 மாகாண ஆளுநர்களை தேர்வு செய்வதற்கான பொதுத் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது. இதில் 17 மாகாணங்களில் தங்கள் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருப்பதாக அதிபர் நிக்கோலஸ் அறிவித்துள்ளார். மேலும் இந்த தேர்தல் மூலம் வெனிசுலாவில் ஜனநாயகம் தழைத்தோங்குவது நிரூபிக்கப்பட்டு விட்டதாகவும் மதுரோ பெருமிதம் தெரிவித்துள்ளார். அதே சமயம் இந்தத் தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தத் தேர்தலில் ஏராளமான வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். மொத்தம் 226 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.