பிரியங்காவின் பிறந்தநாள் கேக்கின் விலை ரூ.3.5 லட்சம் ?
பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவின் பிறந்த நாளுக்கு 3.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான கேக் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில், விஜய் ஜோடியாக அறிமுகமாகி இந்தியில் முன்னணி ஹீரோயினாக உயர்ந்தவர் பிரியங்கா சோப்ரா. இப்போது ஹாலிவுட் படங்கள் மற்றும் தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் அங்கு நடிக்கும்போது, அமெரிக்க பாப் பாடகரும் நடிகருமான நிக் ஜோனாஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் தன்னுடைய 37வது பிறந்தநாளை மியாமியில் தனது கணவருடன் பிரியங்கா சோப்ரா கொண்டாடினார். அவர் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரவின. அதில் பிரியங்கா சோப்ரா புகைப்பிடிப்பது போன்ற ஒரு புகைப்படம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பிரியங்காவின் கணவர் நிக் ஜோனஸ் அவருக்காக ரூ.3.5லட்சம் மதிப்பிலான கேக்கை பிரத்தியேகமாக தயாரித்து பரிசாக வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐந்து அடுக்குகள் கொண்ட அந்த கேக்கில் சிவப்பு கிரீம் கொண்டும் அதற்கு மேல் தங்கத் துகள்கள் தூவப்பட்டும் தயாரிக்கப்பட்டுள்ளது.