டிசைனரின் வீட்டை காப்பாற்றிய 10,000 கார்ட்டூன் வாத்துகள்-அமெரிக்காவில் நிகழ்ந்த சுவாரஸ்யம்

டிசைனரின் வீட்டை காப்பாற்றிய 10,000 கார்ட்டூன் வாத்துகள்-அமெரிக்காவில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிசைனரின் வீட்டை காப்பாற்றிய 10,000 கார்ட்டூன் வாத்துகள்-அமெரிக்காவில் நிகழ்ந்த சுவாரஸ்யம்

10,000 கார்ட்டூன் வாத்துகள் அடங்கிய NFT தொகுப்பு ஒரு தம்பதியரின் வீடு திவாலாகிப் போவதிலிருந்து காப்பாற்றியிருக்கிறது.

டாஸ்டர்ட்லி என்று பெயரிடப்பட்ட 10,000 ஆயிரம் வாத்துகள் அடங்கிய இந்த சேகரிப்பானது 6 மணி நேரத்துக்குள் 1,20,000 டாலர்களுக்கு விற்பனையாகியிருக்கிறது. தோர்ன் மெல்ச்சர் மற்றும் மாண்டி முஸ்ஸல்வெட் தம்பதியரின் தாங்கள் வாத்துகள் வளர்த்த அட்லாண்டா வீட்டை 40,000 டாலருக்கு அடமானத்தில் வைத்திருக்கின்றனர். வீடு திவாலாகிப்போகும் நிலை வந்ததால் செய்வதறியாது திகைத்தனர் தம்பதியர். கடைசியில் ஒரு நண்பரின் உதவியுடன் NFT காட்டூன்களை உருவாக்கியிருக்கிறார் கலைஞரான முஸ்ஸல்வைட். அவர் இரண்டே வாரத்தில் 100 வித்தியாசமான கேரக்டர்கள் கொண்ட 10 ஆயிரம் NFT காட்டுன்களை உருவாக்கியிருக்கிறார். மேலும் வாத்துப்பண்ணை வைத்திருக்கிற இந்த தம்பதி விவசாயத்திற்கு வாத்துகள் எவ்வாறு உதவுகின்றன என்பது பற்றியும் தங்கள் கார்ட்டூன்கள்மூலம் விளக்கியிருக்கின்றனர்.

பூஞ்சை தொற்று அல்லாத டோக்கன்களுக்கான சுருக்கமான NFTகள், பிளாக்செயின் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்ட தனித்துவமான டிஜிட்டல் கலையாகும். இந்த தொழில்நுட்பமானது கடந்த ஆண்டு பிரபலமானது. இது ஒரு மெய்நிகர் உலகத்தையே உருவாக்கிவிடும். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட 10,000 வாத்து கார்ட்டூன்கள் 6 மணிநேரத்தில் 1,20,000 டாலர்களுக்கு விற்று தீர்க்கப்பட்டதாக அந்த தம்பதியர் தெரிவித்திருக்கின்றனர். இதற்கு உதவிய அனைவருக்கும் நன்றியும் தெரிவித்திருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com