இலங்கைக்கான பொருளாதார உதவியை நிறுத்துமாறு ஜப்பானிடம் கோரிய ரணில் - விக்கிலீக்ஸ் அம்பலம்

இலங்கைக்கான பொருளாதார உதவியை நிறுத்துமாறு ஜப்பானிடம் கோரிய ரணில் - விக்கிலீக்ஸ் அம்பலம்
இலங்கைக்கான பொருளாதார உதவியை நிறுத்துமாறு ஜப்பானிடம் கோரிய ரணில் - விக்கிலீக்ஸ் அம்பலம்

இலங்கையின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவிற்கும், ஜப்பான் அரசுக்கும் இடையில் இடம்பெற்ற உரையாடல் தொடர்பான ஆவணத்தை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, எரிபொருள், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு கடும் பஞ்சம் ஏற்பட்டு போராட்டம் வெடித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்ததால்,  இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார்.

இலங்கையின் 8-வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்ற அன்றே, ரணிலுக்கும் ஜப்பான் அரசுக்கும் இடையில் நடந்த உரையாடல் தொடர்பான ஆவணத்தை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

விக்கிலீக்ஸ் பகிர்ந்த ஆவணத்தின்படி, 2007ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான பொருளாதார உதவியை நிறுத்துமாறு ஜப்பானிடம் கோரியிருந்தார். அதற்கு ஜப்பான் அளித்த பதிலில், இலங்கை நாட்டின் தலைவர்கள் கமிஷன் பெற்றுக் கொள்வதனாலும், மக்களை உதாசீனம் செய்வதனாலும் அந்த நாட்டு மக்கள் பாதிக்கப்படக் கூடாது. எனவே உதவி வழங்குவதனை நிறுத்த முடியாது என்று ஜப்பான் பதிலளித்ததாக அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com