மூத்த கேபினட் அமைச்சரை டிஸ்மிஸ் செய்த நியூசிலாந்து பிரதமர்!

மூத்த கேபினட் அமைச்சரை டிஸ்மிஸ் செய்த நியூசிலாந்து பிரதமர்!

மூத்த கேபினட் அமைச்சரை டிஸ்மிஸ் செய்த நியூசிலாந்து பிரதமர்!
Published on

நியூசிலாந்து செப்டம்பர் மாதம் பொதுத்தேர்தலை சந்திக்க உள்ளது. இந்நிலையில் நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா அடெர்ன்,  மூத்த கேபினட் அமைச்சரை பதவி நீக்கம் செய்துள்ளார். குடிவரவு அமைச்சரான லைன் லிஸ் கல்லொவே தனது கீழ் செயல்பட்டு வந்த இலாகாவில் வேலை செய்த அலுவலரோடு ஏற்பட்ட சர்ச்சை, காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

சென்டர் ரைட் நேஷனல் கட்சியில், தன்னுடன் வேலை பார்க்கும் அண்ட்ரு ப்பலூன் என்பவர் ஒரு பெண்ணிற்கு அளிக்கப்பட்ட ‘செக்ஸ்டிங்’ காரணமாக செய்த ராஜினாமாவை அடுத்து இந்த விஷயத்தை  கையில் எடுத்துள்ளார். சென்டர்-ரைட் கட்சியின் தலைவர், "பணியாளர்களின் உறவு மற்றும் ஒழுக்கம்  தொடர்பான  இலாகாவுக்கு சொந்தமான ஒரு அமைச்சர் இவ்வாறு செய்வது ஏற்புடையது அல்ல" என்கிறார்.

கடந்த ஒரு வருடமாக நீதி, கடமை தவறி  செயல்படுவதாகவும், இந்த விஷயத்தில் தனது அலுவலகத்தை முறைகேடாக பயன்படுத்தி வந்ததையும் அவரே ஒப்புக்கொள்கிறார்.

அடெர்ன் கூறுகையில், தான் எந்த ஒரு நீதி தவறியதாக பழி சுமத்தவில்லை, எனினும்  பணியிடங்களில்  அலுவலர்களின் பண்பிற்கும் கலாச்சாரத்திற்கும் முன்மாதிரியாக செயலாற்ற வேண்டிய ஒரு அமைச்சரிடம்  இந்த செயலை நான் எதிர்பார்க்கவில்லை என்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவரானார் ஜூடித் காலின்ஸ், அடெர்ன்  அலுவலகத்தில்  இந்த சர்ச்சை குறித்த தகவல்களை சமர்ப்பித்துள்ளார்.  மேலும்  இந்த விஷயத்தில் நீதியை ஈட்டி தர பொதுமக்களையும் நாடியுள்ளார்.

செப்டம்பர் மாதம் வர இருக்கும் பொதுத்தேர்தலில், அடெர்னை  எதிர்த்துப் போட்டியிட காலின்ஸ் அவர்கள் சென்றவாரம் எதிர் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

தேசிய அளவிலான மக்கள் கருத்து கணிப்பில் வேடனின் லேபர் கட்சி முன்னிலை வகிக்கின்றது. லீஸ் கல்லொவே  சர்ச்சை விவகாரம்,  இவரது இரண்டாவது பிரதமர் வாய்ப்பிற்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் கிரஷ்ஷர் கொலின்ஸ் என்று செல்லமாக அழைக்கப்படுகின்ற எதிர்க்கட்சித் தலைவர்  அவருக்கு தகுந்த போட்டியாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com