உலகம்
அமெரிக்காவில் கொரோனா தாண்டவம் : ஒரே தேவாலயத்தில் 44 பேர் மரணம்
அமெரிக்காவில் கொரோனா தாண்டவம் : ஒரே தேவாலயத்தில் 44 பேர் மரணம்
அமெரிக்காவில் ஒரே தேவாலயத்தைச் சேர்ந்த 44 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை அங்கு 14 லட்சத்திற்கு மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 83 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்கா சோகக்கடலில் மூழ்கியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவில் ஒரே தேவாலயத்தைச் சேர்ந்த 44 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அந்தத் தேவாலயத்தின் பாதிரியார் வருத்தத்துடன் தெரிவித்தது அனைவரையும் கலங்கச் செய்தது. தேவாலயத்திற்கும் வருபவர்கள் எண்95 முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இது குறித்த செய்தியை சிஎன்.என் வெளியிட்டுள்ளது.