\
ரஷ்யாவுக்கு எதிராக ஆப்பிள் நிறுவனம் எடுத்த புதிய முடிவு

ரஷ்யாவுக்கு எதிராக ஆப்பிள் நிறுவனம் எடுத்த புதிய முடிவு

ரஷ்யாவுக்கு எதிராக ஆப்பிள் நிறுவனம் எடுத்த புதிய முடிவு
Published on: 

ரஷ்யாவில் ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்கள் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் மும்முனை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள், நிறுவனங்கள், அமைப்புகள் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகின்றன.

அந்த வகையில், ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளின் விற்பனை ரஷ்யாவில் நிறுத்தப்படுவதாக அந்நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் செல்போன், டிவி உள்பட அனைத்து தயாரிப்புகளின் விற்பனையும் ரஷ்யாவில் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஆப்பிள் பே செயலியும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் பணம் அனுப்புவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com