இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் பதவியேற்றார்
இந்தியாவிற்கான புதிய அமெரிக்க தூதராக கென்னத் ஜஸ்டர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்தியாவுக்கான தூதராக இருந்த ரிச்சர்ட் வர்மா கடந்த ஜனவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 10 மாதங்களாக அந்தப்பதவி காலியாக இருந்தது. இதைத் தொடர்ந்து ஜஸ்டர் அப்பதவியில் நியமிக்கப்படுவதாக கடந்த 2ம் தேதி அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக கென்னத் ஜஸ்டர் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
இவர் இந்தியா-அமெரிக்கா இடையேயான உள்நாட்டு அணுசக்தி ஒப்பந்தங்களில் முக்கிய பங்கு வகித்தவர் ஆவார். அத்துடன் சர்வதேச பொருளாதார விவகாரங்களுக்கான தலைவராகவும், தேசிய பொருளாதார ஆணையத்தின் துணை இயக்குநராகவும் பொறுப்பு வகித்துள்ளார். தற்போது இந்திய தூதரக பதவியேற்றுக் கொண்ட ஜஸ்டருக்கு, அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் உறவுகளை வலுப்படுத்த அமெரிக்க தீவிரம் காட்டி வரும் நிலையில், ஜஸ்டரின் நியமனம் நடைபெற்றுள்ளது.