\
Netanyahu to become a power center
Netanyahu to become a power centerReuters

பிரதமர் நாற்காலியை விட்டுக்கொடுக்கத் தயார்? நெதன்யாகுவின் புதிய வியூகம்

கூட்டணி அரசுக்கு நெதன்யாகுவின் புதிய யோசனை: ஐசன்காட் பதிலென்ன?
Published on: 

செய்தியாளர் - M.மீரா

கடந்த அக்டோபர் 27-ம் தேதி நடைபெற்ற இஸ்ரேல் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தம் 120 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைக்க 61 இடங்கள் தேவை. ஆனால் நெதன்யாகு தலைமையிலான கூட்டணிக்கு 53 இடங்களும், ஐசன்காட் தலைமையிலான அணிக்கு 48 இடங்களும் மட்டுமே கிடைத்தன. அரபு கட்சிகள் 19 இடங்களைப் பெற்றுள்ளன.

இதையடுத்து, புதிய அரசை அமைக்கும் பொறுப்பு ஐசன்காட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 6-ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைக்க அவருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அவர் தோல்வியடைந்தால், அடுத்ததாக நெதன்யாகுவுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

Benjamin Netanyahu
Benjamin Netanyahureuters

ஆனால், நெதன்யாகுவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதில் ஐசன்காட்டின் கூட்டணிக் கட்சிகளிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. குறிப்பாக, இஸ்ரேல் பெய்டெய்னு கட்சித் தலைவர் அவிக்டோர் லிபர்மேன், நெதன்யாகுவின் இந்த முன்மொழிவு மற்றொரு தேர்தலைக் கொண்டுவருவதற்கான அரசியல் தந்திரமாக இருக்கலாம் என்று எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் இஸ்ரேலில் புதிய ஆட்சியை அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அரசியல் எதிரியான காடி ஐசன்காட்டுக்கு பிரதமர் பதவியை விட்டுக்கொடுக்க முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் இணைந்து சுழற்சி முறையில் பிரதமர் பதவியை வகிக்கும் கூட்டணி அரசை அமைக்க நெதன்யாகு முன்மொழிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன்படி, முதலில் காடி ஐசன்காட் பிரதமராகப் பதவி வகிக்கலாம் என்றும், அதற்குப் பிறகு நெதன்யாகு பிரதமர் பொறுப்பை ஏற்கத் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தகவலை இஸ்ரேலின் 'தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்' செய்தி வெளியிட்டுள்ளது. இந்த முன்மொழிவு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்றாலும், இஸ்ரேல் அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Gadi Eisenkot
Gadi Eisenkotreuters

மேலும், நெதன்யாகு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளும் அரசியல் சூழலில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இந்நிலையில், பிரதமர் பதவியைப் பகிர்ந்துகொள்ளும் நெதன்யாகுவின் யோசனையை ஐசன்காட் ஏற்றுக்கொள்வாரா அல்லது இஸ்ரேலில் மீண்டும் தேர்தல் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Netanyahu to become a power center
US air force முதல் FBI வரை... அடுத்தடுத்து சைபர் தாக்குதல்! நிலைக்குலைந்து நிற்கும் அமெரிக்கா