\
trump & Netanyahu
trump & Netanyahureuters

நெதன்யாகுவின் பதவிக்கே ஆபத்தா? ட்ரம்பின் ரகசிய திட்டம்!

நெதன்யாகுவின் அரசியல் முடிவு ட்ரம்பின் மத்திய கிழக்கு திட்டத்தின் முக்கிய அங்கமாக மாறியுள்ளது.
Published on: 
Summary

ட்ரம்பின் மத்திய கிழக்கு திட்டம், நெதன்யாகுவின் அரசியல் எதிர்காலத்தை மாற்றும் வகையில் அமைந்துள்ளது. சவுதி-இஸ்ரேல் உறவை இயல்பாக்கும் முயற்சியில், நெதன்யாகு இரண்டு ஆண்டுகளில் பதவியை விலகும் வாய்ப்பு உள்ளது. இதனால், மத்திய கிழக்கில் அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழலில் பெரும் மாற்றங்கள் ஏற்படலாம்.

செய்தியாளர் - M.மீரா

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மத்திய கிழக்கில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டம் ஒன்றை முன்னெடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் அரசியலில் இருந்து விலகுவதற்கான ஒப்பந்தம் குறித்து அமெரிக்கா மற்றும் பிராந்திய நாடுகளின் அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

நெதன்யாகுவின் அரசியல் எதிர்காலம், சவுதி அரேபியா - இஸ்ரேல் உறவு, ஈரான் மீதான புதிய போர் அச்சம் என மத்திய கிழக்கில் பல்வேறு முக்கிய நகர்வுகள் ஒரே நேரத்தில் கவனம் பெற்றுள்ளன.

Trump & Mohammed Bin Salman
Trump & Mohammed Bin Salman Reuters

இஸ்ரேலிய ஊடகமான இஸ்ரேல் ஹயோம் வெளியிட்ட செய்தியில் இஸ்ரேலில் தேசிய ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்படி, நெதன்யாகு அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் பிரதமராகத் தொடரலாம். அதன் பின்னர் அவர் அரசியலில் இருந்து விலகுவது, மத்திய கிழக்கு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த அரசியல் நகர்வுக்கும் சவுதி அரேபியாவுடன் இஸ்ரேல் உறவை இயல்பாக்கும் முயற்சிக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இஸ்ரேலுடன் தூதரக உறவுகளை ஏற்படுத்துவதற்கு சவுதியைச் சம்மதிக்க வைப்பது ட்ரம்பின் முக்கிய வெளியுறவுக் கொள்கை இலக்குகளில் ஒன்றாகும். இதற்காக, சவுதிக்கு கூடுதல் பாதுகாப்பு ஒத்துழைப்பை வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிநவீன F-35 போர் விமானங்களை விற்பனை செய்வது மற்றும் சிவில் பயன்பாட்டுக்கான அணுசக்தித் திட்டத்திற்கு ஆதரவளிப்பது போன்ற சலுகைகளும் பரிசீலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

F 35 warplanes
F 35 warplanesreuters

மேலும், இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்கும் நாடுகளை உள்ளடக்கிய ஆபிரகாம் ஒப்பந்தங்களில் சவுதி அரேபியாவையும் இணைக்க ட்ரம்ப் விரும்புவதாகத் தெரிகிறது. இந்த முயற்சி வெற்றிபெற்றால், மத்திய கிழக்கின் அரசியல் மற்றும் பாதுகாப்புச் சூழலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படலாம்.

இதற்கிடையே, இஸ்ரேலில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படும் தேர்தலுக்கு முன்னதாக ஈரான் மீது மீண்டும் ராணுவ நடவடிக்கை எடுக்க நெதன்யாகு அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் வலியுறுத்தியதாகச் சேனல் 12 செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், புதிய தாக்குதல் நடத்துவதற்கான நேரம் தங்களுக்கு சாதகமாக இருக்காது என்று நெதன்யாகு பின்னர் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Netanyahu in Israel Parliament
Netanyahu in Israel Parliament Reuters

ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற அச்சமும் நிலவுகிறது. அத்தகைய சூழல் உருவானால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன், பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாகத் தேர்தல் நடவடிக்கைகளும் சிக்கல்களைச் சந்திக்கக்கூடும் என்பதால் தாக்குதல் நடவடிக்கை நிறுத்தப்பட்டிருக்கிறது என்று அச்செய்தி கூறுகிறது.

trump & Netanyahu
ஹவுதிகளின் அடுத்த அதிரடி! பின்னணியில் சீனா? சவுதி, இஸ்ரேலுக்கு நெருக்கடி!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com