இந்திய ரூபாய் தாள்களை நேபாளத்தில் பயன்படுத்தலாம் என அறிவிப்பு
இந்திய ரூபாய் தாள்களை நேபாளத்தில் பயன்படுத்தலாம் என அறிவிப்புweb

ரூ.200, ரூ.500 | இந்திய ரூபாய் தாள்களை நேபாளத்தில் பயன்படுத்தலாம்.. நேபாள அரசு அறிவிப்பு!

இந்தியாவின் 200 ரூபாய் மற்றும் 500 ரூபாய் பணத்தாள்களை தங்கள் நாட்டில் பயன்படுத்தலாம் என நேபாள அரசு அனுமதித்துள்ளது.
Published on
Summary

நேபாளத்தில் இந்திய ரூபாய் தாள்களை பயன்படுத்த தடை நீக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் நேபாள சுற்றுலாத்துறை பலனடையும். ஒரு நபர் அதிகபட்சம் 25,000 ரூபாய்களை வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய ரூபாய் நோட்டுகளை நேபாளத்தில் பயன்படுத்த ஏற்கனவே அனுமதி இருந்தாலும் கடந்த10 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது தடைநீக்கப்பட்டுள்ளது. ஒரு தனி நபர் அதிகபட்சம் 25 ஆயிரம் இந்தியரூபாய்களை கைவசம் வைத்திருக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

தங்கள்நீண்டகால கோரிக்கையை ஏற்று இந்தஅனுமதியை இந்திய ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளதாக நேபாள ராஷ்ட்ர வங்கி தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்திய சுற்றுலாப் பயணிகள்பலனடைவதுடன் நேபாள சுற்றுலாத்துறையும் பலனடையும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com