\
Nepal Floods: 5,000 Missing, Including 213 Indians, Presumed Dead
நேபாள வெள்ளம்Reuters

நேபாள துயரம் | 5,000 பேரை உ*ரிழந்தவராக அறிவிக்க முடிவு.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவுத்தல்!!

பட்டியல் இறுதி செய்யப்பட்ட பிறகு, அவர்கள் உயிரிழந்ததாக நேபாள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.
Published on: 

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட 5000க்கும் மேற்பட்டோரை உயிரிழந்திருக்கலாம் எனக் கருதி, அவர்களை உயிரிழந்தவர்களாக அறிவிக்கும் நடவடிக்கையை அந்நாட்டு அரசு தொடங்கியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி நேபாளம் - திபெத் எல்லைக்கு அருகே ஏற்பட்ட பாறை மற்றும் பனிப்பாறை சரிவு காரணமாக உருவான வெள்ளம், போதே கோஷி மற்றும் திரிசூலி நதிகளின் வழியாகப் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளப்பெருக்கு நேபாளத்தில் உலகை உலுக்கிய பேரழிவை ஏற்படுத்தியது.

Reuters

இந்தப் பேரிடரில் சிக்கி உயிரிழந்த 1,400க்கும் அதிகமானோர்களின் உடல்கள் தற்போது வரை கைப்பற்றப்பட்டிருக்கின்றன. அதேபோல, நேபாளம், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 5000 மேற்பட்டோர் வெள்ளத்தில் காணாமல் போனோர் என அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தச்சூழலில் தான், அவர்களை தேடும் பணியில் அந்நாட்டு மீட்பு படை ஈடுபட்டு வந்தது.

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 3 மாதங்களைக் கடந்திருக்கும் நிலையில், உயிரிழந்தவர்களை காணாமல் போன 5000க்கும் அதிகமானோர்களை உயிரிழந்தவர்கள் என அறிவிக்கும் நடவடிக்கையை அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது.

இந்தப்பட்டியலில் உள்ளவர்களில், 213 பேர் இந்தியர்கள் எனத் தற்போது தெரியவந்துள்ளது. இவர்களின், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தப் பட்டியலில் ஏதேனும் திருத்தங்கள் அல்லது ஆட்சேபனைகள் இருந்தால், டிசம்பர் 2ஆம் தேதிக்குள் தொடர்புகொள்ளுமாறு இந்தியத்தூதரகம் வலியுறுத்தியுள்ளது. பட்டியல் இறுதி செய்யப்பட்ட பிறகு, அவர்கள் உயிரிழந்ததாக நேபாள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். அதன் பின்னர், சம்பந்தப்பட்டவர்களுக்கான இறப்புச் சான்றிதழ்களைப் பெறும் நடவடிக்கையை இந்தியத் தூதரகம் மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nepal Floods: 5,000 Missing, Including 213 Indians, Presumed Dead
பட்டியலின மக்களின் வாக்குகளை குறிவைக்கும் பாஜக.. உ.பி., பஞ்சாப் தேர்தலுக்காக புதிய வியூகம்!!