நேபாளத்தை அதிரவைத்த சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.
யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் ஆய்வு (யுஎஸ்ஜிஎஸ்) படி இன்று காலை 6.35 மணிக்கு , நேபாளத்தில் லாபுசே நகரில் இருந்து 93 கிலோ மீட்டர் தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த சக்திவாய்ந்த நடுக்கத்தால் கட்டிடங்கள் உள்பட அனைத்தும் பயங்கரமாக குலுங்கியுள்ளது.
பதிவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1 எனப் பதிவாகியிருக்கிறது. இதன் அதிர்வு டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பீகார் உட்பட வட இந்தியாவின் பல பகுதிகளில் வசிப்பவர்கள் பலர் நிலம் நடுங்குவதை உணர்ந்து பாதுகாப்புக்காக வெளியில் விரைந்தனர். இதையடுத்து, உள்ளூர் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.
இதுவரை சேதாரங்கள் குறித்த எந்தத் தகவலும் இல்லை. மேலும், நிலநடுக்கம் தொடர்பான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.