கடும் பக்கவிளைவுகள்.. இந்திய ஆன்டிபயாடிக் ஊசிக்கு திடீர் தடை விதித்த நேபாளம்!
இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரித்திருக்கும் Biotax 1gm injection என்பது மூளை, நுரையீரல், காதுகள், சிறுநீர்ப் பாதை, தோல், மென்மையான திசுக்கள், எலும்புகள் மற்றும் மூட்டுகள், ரத்தம் மற்றும் இதயம் போன்ற உடலின் பல்வேறு பாகங்களை பாதிக்கும் பாக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பதற்குப் பரிந்துரைக்கப்படும் ஆன்டிபயாடிக் மருந்தாகும்.
கூடுதலாக, அறுவைசிகிச்சையின் போது தொற்றுநோய்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாக இது பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், Biotax 1gm injection மருந்து நேபாள ஆய்வுக் கூடத்தில் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக் கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்த பயோடக்ஸ் மருந்து, அதில் குறிப்பிட்ட தயாரிப்பு முறைகளைப் பின்பற்றவில்லை என்பது, நேபாளத்தின் மருந்து ஒழுங்குமுறை ஆய்வுக்கூடத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் தெரிய வந்திருப்பதாக காத்மாண்டு போஸ்ட் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக காத்மாண்டு போஸ்ட் வெளியிட்டிருக்கும் தகவலில், தயாரித்திருக்கும் Biotax 1gm மருந்து குறித்து, மருந்து தயாரிப்பு நிறுவனம், இறக்குமதியாளர்கள், விநியோகிப்பாளர்கள் என அனைவருக்கும் மருந்து விற்பனை, இறக்குமதி மற்றும் விநியோகத்தை, அடுத்த அறிவிப்பு வரும் வரை நிறுத்துமாறு அறிவுறுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ளது.