உடுக்கை இழந்தவன் கைபோல ஒரு நட்பு: கடற்படை அதிகாரியைக் காப்பாற்றிய பூப்பூ

உடுக்கை இழந்தவன் கைபோல ஒரு நட்பு: கடற்படை அதிகாரியைக் காப்பாற்றிய பூப்பூ
உடுக்கை இழந்தவன் கைபோல ஒரு நட்பு: கடற்படை அதிகாரியைக் காப்பாற்றிய பூப்பூ

 மனிதர்களுக்கும் நாய் போன்ற செல்லப்பிராணிகளுக்கும் அப்படியொரு பந்தம். எஜமானர்களுக்காக உயிரைத் துறக்கும் செல்ல வளர்ப்புகள் எத்தனையோ உண்டு. அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரி 86 வயதான ரூடி ஆம்ஸ்ட்ராங்க், அப்படியொரு நாய்க்குட்டியைத்தான் வளர்த்துவருகிறார். அதன் செல்லப் பெயர் பூப்பூ.

சமூகவலைதளங்களில் பூப்பூ பற்றிய தகவல் பரவி பலரது இதயங்களைத் தொட்டுள்ளது. ஒரு நாள் காபி குடித்துக்கொண்டு அமர்ந்திருந்த முன்னாள் கடற்படை அதிகாரிக்கு தலையை அசைக்கமுடியவில்லை. கால்களையும் நகர்த்தமுடியவில்லை. இதைக் கண்ட பூப்பூ, உடனே ஓடிச்சென்று மற்றொரு கடற்படை அலுவலரிடம் சத்தம் எழுப்பி எச்சரிக்கை செய்தது.

அதையறிந்த அந்த அதிகாரி, உடனே ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் அனுப்பினார். கரோலினா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங்க் நலம் பெற்றதும், தன் செல்லப்பிராணியைப் பார்த்து நன்றிகூற விரும்பினார். பின்னர் மருத்துவர்கள் அனுமதியுடன் வரவழைக்கப்பட்ட பூப்பூவைக் கண்டதும் அவர் உற்சாகத்துடன் கொஞ்சத் தொடங்கிவிட்டார். அந்தக் காட்சி காண்போரை நெகிழவைத்தது.

இந்த பேரன்பின் தருணங்கள்தான் புகைப்படங்களாக ஃபேஸ்புக்கில் பரவி, உன்னத நட்பை உலகுக்கு அறிவித்துள்ளது. அந்தப் புகைப்படங்களுக்கு ஃபீல் குட் ப்ரைடே என்று பெயரிட்டிருந்தார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com