ரஷ்யாவை எதிர்க்க புதிய வியூகத்தை அமைக்கிறது நேட்டோ - அதிகரிக்கும் போர் பதற்றம்

ரஷ்யாவை எதிர்க்க புதிய வியூகத்தை அமைக்கிறது நேட்டோ - அதிகரிக்கும் போர் பதற்றம்
ரஷ்யாவை எதிர்க்க புதிய வியூகத்தை அமைக்கிறது நேட்டோ - அதிகரிக்கும் போர் பதற்றம்

உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவை எதிர்ப்பதற்கு புதிய வியூகம் ஒன்றை அமைக்க நேட்டோ நாடுகள் ஆலோசித்து வருகின்றன. நேட்டோ நாடுகளின் இந்த திடீர் நடவடிக்கையால் உக்ரைன் பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

நேட்டோ கூட்டணியில் தன்னை இணைத்துக் கொள்ள உக்ரைன் முயற்சித்ததே அந்நாடு மீது ரஷ்யா போர் தொடுப்பதற்கு முக்கிய காரணம் ஆகும். முதலில், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தினால் ரஷ்யா மீது போர் தொடுப்போம் என அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் பகிரங்கமாக எச்சரித்தன. ஆனால், அதை பொருட்படுத்தாமல் கடந்த மாதம் 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது. மூன்று வாரங்களுக்கும் மேலாக உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் போதிலும், அதனை தடுக்க நேட்டோ நாடுகள் முன்வரவில்லை.

இருந்தபோதிலும், ஆயுத உதவிகளை மட்டும் உக்ரைனுக்கு நேட்டோ நாடுகள் செய்து வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, ரஷ்யாவை எச்சரிக்கும் விதமாக போலந்து உள்ளிட்ட அதன் அண்டை நாடுகளில் நேட்டோ தனது ராணுவத் துருப்புகளை நிறுத்தியுள்ளது. இது, ரஷ்யாவை அச்சுறுத்தும் நடவடிக்கையாகவே உலக நாடுகள் பார்த்தன. ஆனால், ரஷ்யாவோ கடந்த வாரம் போலந்து எல்லையில் உள்ள உக்ரைன் ராணுவத் தளம் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இது, நேட்டோ நாடுகளுக்கு ரஷ்யா விடுத்த எச்சரிக்கையாக கருதப்படுகிறது.

இதையடுத்து, ரஷ்யாவுக்கு வேறு விதத்தில் மிரட்டல் விடுக்க நேட்டோ நாடுகள் முடிவு செய்துள்ளன. அதன்படி, நேட்டோ படைகளை ரஷ்யாவுக்கு மிக அருகே இருக்கும் நாடுகளுக்கும் விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் இன்று விடுத்திருக்கும் அறிக்கையில், "தற்போதைய அசாதாரண சூழலுக்கேற்ப நேட்டோ ராணுவப் படைகளை மாற்றியமைக்க வேண்டியது அவசியம். இதுதொடர்பாக நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்து பேசவுள்ளனர். அதன் பிறகு முக்கிய முடிவு எடுக்கப்படும்" எனக் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com