பற்றி எரியும் அமேசான் காடுகள்: அதிருப்தி அடைந்த டைட்டானிக் ஹீரோ !

பற்றி எரியும் அமேசான் காடுகள்: அதிருப்தி அடைந்த டைட்டானிக் ஹீரோ !
பற்றி எரியும் அமேசான் காடுகள்: அதிருப்தி அடைந்த டைட்டானிக் ஹீரோ !

அமேசான் காடுகளில் ஏற்பட்ட தீ  புகை தொடர்பான செயற்கை கோள் படத்தை நாசா வெளியிட்டுள்ளது. 

உலகளவில் மிகவும் பிரபலமான காடு பிரேசிலின் அமேசான் காடு ஆகும். இந்தக் காட்டில் பல அரிய வகை உயிரினங்கள் வசித்து வருகின்றன. சமீபத்தில் இந்தக் காடுகளில் அதிகளவில் காட்டு தீ பரவிவருகிறது. எனவே அந்தப் பகுதியின் பெரும்பாலான இடங்களில் காட்டு தீயின் புகை அதிகரித்து வருகிறது. இந்த வருடத்தில் அமேசான் காடுகளில் அதிகமாக தீ ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 9,500 காட்டு தீ சம்பவங்கள் அமேசான் காடுகளில் நடைபெற்றதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த காட்டில் கடந்த இரண்டு வாரமாக காட்டு தீ ஏரிந்து வருகிறது. இதுதொடர்பாக ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டி காப்பிரியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “பூமியில் 20 சதவிகிதம் ஆக்ஸிஜன் கொடுக்கும் அமேசான் காட்டில் தீ பற்றி ஏறிந்து வருகிறது. பூமியின் நுரையீரலாக விளங்கும் இந்தக் காட்டு தீயை ஏன் பத்திரிகைகள் கண்டு கொள்ளவில்லை” என்று தனது அதிருப்தியை வெளிபடுத்தியுள்ளார். 

இந்நிலையில் அமெரிக்க விண்வெளி மையமான நாசா அமேசான் காட்டு தீயினால் ஏற்பட்டுள்ள புகை மண்டலம் தொடர்பான படத்தை வெளியிட்டுள்ளது. அதில், “அமேசான் காட்டில் ஏற்பட்டுள்ள தீயின் புகை பிரேசலின் பல மாநிலங்களுக்கு பரவி வருகிறது. இது தொடர்பான படத்தை எங்களின் செயற்கைகோள் எடுத்துள்ளது” என்று புகைபடத்துடன் பதிவிட்டுள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com