டோங்கா: வெடித்து சிதறிய எரிமலை.. மேலெழுந்த சாம்பல்.. பார்த்து மிரண்டு போன விண்வெளி வீரர்

டோங்கா: வெடித்து சிதறிய எரிமலை.. மேலெழுந்த சாம்பல்.. பார்த்து மிரண்டு போன விண்வெளி வீரர்
டோங்கா: வெடித்து சிதறிய எரிமலை.. மேலெழுந்த சாம்பல்.. பார்த்து மிரண்டு போன விண்வெளி வீரர்

பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான டோங்காவில் கடந்த சனிக்கிழமையன்று கடலுக்கு அடியில் எரிமலை வெடித்தது. அதையடுத்து அந்த நாட்டை சுனாமி அலைகள் தாக்கின. உலகத்துடனான தகவல் தொடர்பையும் இழந்தது அந்த நாடு. தற்போது சேதம் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் எரிமலை வெடித்து சிதறிய போது அது வெளியிட்ட சாம்பல்கள் ஆயிரம் அடிக்கும் மேல் எழுந்ததாகவும், அதன் காரணமாக அதை சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விண்வெளி வீரர்கள் பார்க்க முடிந்ததாகவும் சொல்லியுள்ளது நாசா. அதோடு அந்த புகைப்படங்களையும் நாசா பகிர்ந்துள்ளது. 

எரிமலையின் சீற்றத்தை நியூசிலாந்து நாட்டை கடந்த போது விண்வெளி வீரர் கைலா பரோன், ஜன்னலை திறந்த போது பார்த்ததாக நாசா தெரிவித்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத பேரழிவு என டோங்கா நாட்டு அரசு இந்த பேரிடரை சொல்லியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com