‘கூல்’ TOI-1231 b - நாசா விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ள புதிய கோள்

‘கூல்’ TOI-1231 b - நாசா விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ள புதிய கோள்
‘கூல்’  TOI-1231 b - நாசா விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ள புதிய கோள்

பூமிக் கோளில் இருந்து 90 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள TOI-1231 b என்ற புதிய கோளை அடையாளம் கண்டுள்ளனர் அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசாவின் விஞ்ஞானிகள். அச்சு அசல் இந்த கோள் பார்ப்பதற்கு நெப்டியூனை போல இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியை விட மூன்றரை மடங்கு இந்த கோள் பெரியது என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த கோளில் நீர் இருக்க வாய்ப்புகள் இருப்பதாகவும், அதிக குளர்ச்சியான தன்மை இருக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லியுள்ளனர். எதிர்வரும் நாட்களில் இந்த கோள் குறித்து மேலும் பல ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட பூமியில் நிலவும் சீதோஷண நிலை இந்த கோளில் நிலவ வாய்ப்பு இருப்பதாகவும் விஞ்ஞானிகள் சொல்லியுள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com