\
NASA Curiosity Rover Discovers Potato Chip-Shaped Rocks on Mars
NASA Finds Potato Chip-Shaped Rock Formations on Mars | Curiosity RoverNASA

உருளைக்கிழங்கு சிப்ஸ் போல பாறைகள்! நாசா ரோவரின் மர்மமான கண்டுபிடிப்பு! MARS கிரகத்தில் என்ன இது?

செவ்வாய் கிரகத்தில் உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற விசித்திரமான பாறை வடிவங்களைக் கண்டறிந்த நாசாவின் கியூரியாசிட்டி ரோவர். நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் கண்டுபிடித்த இந்த மர்ம வடிவங்களின் பின்னணி என்ன? விரிவாகப் பார்க்கலாம்!
Published on: 

செய்தியாளர்: துர்கா தேவி சரவணன்

செவ்வாய் கிரகத்தில் உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற தோற்றம் கொண்ட விசித்திரமான பாறை அமைப்புகள் நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் (curiosity rover) கண்டறிந்துள்ளது. இந்தப் பாறைகள் எவ்வாறு உருவாகின, அவற்றின் வேதியல் தன்மை என்ன என்பது குறித்து நாசா விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். 

கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வரும் கியூரியாசிட்டி ரோவர், 'நாஸ்கா' (Nazca) எனப் பெயரிடப்பட்ட பகுதியில் இந்த விசித்திரனமான அமைப்புகளைக் கண்டறிந்தது. அங்குள்ள பாறைகளில் டிஸ்க்-வடிவிலான கிரிஸ்டல்(crystal) எனப்படும் படிகங்கள் காணப்படுகின்றன. சில படிகங்கள் வளைந்தும், ஒழுங்கற்ற வடிவத்திலும் உருளைக்கிழங்கு சிப்ஸ் போலக் காட்சியளிக்கின்றன. 

இதுகுறித்து தகவலை நாசா தனது அதிகாரபூர்வ கியூரியாசிட்டி வலைப்பதிவில் நவம்பர் 11 அன்று வெளியிட்டுள்ளது. 

NASA Curiosity Rover Discovers Potato Chip-Shaped Rocks on Mars
NASA Curiosity Rover Discovers Potato Chip-Shaped Rocks on MarsNASA

இந்தப் படிகங்கள் தன்மையைக் கண்டறிய, ரோவர் நாஸ்கா பகுதியில் பாறைகளைத் துளையிட்டு மாதிரிகளைச் சேகரித்துள்ளது. அவை 'SAM' எனப்படும் sample Analysis for Mars ஆய்வுக் கருவிக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதன் மூலம் பாறைகளின் வேதியியல் அமைப்பு ஆராயப்படுகிறது. 

மேலும், 'கெம்கேம்' (ChemCam) என்ற லேசர் கருவியை பயன்படுத்தி 'கொல்கா' (Colca),  'அஹி வெரெமோஸ்' (Ahi Veremos) உள்ளிட்ட படிக அமைப்புகளை ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல், ரோவரின் கையில் பொருத்தப்பட்டுள்ள MAHLI எனப்படும் கேமரா மூலம் வெள்ளை மற்றும் புற ஊதா ஒளியைப் பயன்படுத்தி இரவு நேரத்திலும் படிகங்களின் புகைப்படங்களை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 

இதற்கிடையே, செவ்வாய் கிரகத்தின் துணைக்கோளான போபோஸ் (phobos), சூரியனை மறைக்கும் நிகழ்வையும் புகைப்படம் எடுக்க நாசா திட்டமிட்டுள்ளது. இந்த ஆய்வுகளை முடித்த பிறகு, கியூரியாசிட்டி ரோவர் நாஸ்கா பகுதியிலிருந்து தெற்குப் பாதையை நோக்கிப் பயணத்தைத் தொடரும். 

NASA Curiosity Rover Discovers Potato Chip-Shaped Rocks on Mars
NASA Curiosity Rover Discovers Potato Chip-Shaped Rocks on MarsNASA

செவ்வாய் கிரகத்தின் பாறைகள் மற்றும் அதன் உருவாக்கம் குறித்த புதிய தகவல்களை இந்த ஆய்வுகள் வெளிப்படுத்தும் என விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர். 

செவ்வாய் கிரகத்தில் இதுவரை கண்டறியப்படாத பல மர்மங்கள் இன்னும் புதைந்துள்ள நிலையில், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற இந்த விசித்திரமான பாறைகள் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளன. இந்தப் படிகங்கள் எவ்வாறு உருவாகின, அவற்றின் பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன என்பதை நாசாவின் ஆய்வுகள் வெளிப்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

NASA Curiosity Rover Discovers Potato Chip-Shaped Rocks on Mars
ஒவ்வொரு குழந்தைக்கும் SpaceX பங்குகள்.. எலான் மஸ்க் எடுத்த திடீர் முடிவு!!