உலகம்
வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியாவின் சிறப்பு: நெதர்லாந்தில் மோடி பேச்சு!
வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியாவின் சிறப்பு: நெதர்லாந்தில் மோடி பேச்சு!
வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியாவின் சிறப்பு என நெதர்லாந்து வாழ் இந்தியர்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
3 நாடுகள் பயணத்தின் கடைசி பகுதியாக நெதர்லாந்து சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள தி ஹேக் நகரில் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, டச்சு பாஸ்போர்ட் வைத்திருப்போருக்கு இந்தியா வர 5 ஆண்டுக்கான விசா வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று அவர் கூறினார். சிறந்த அரசால் மட்டுமே நாட்டில் நல்லாட்சி அமைத்துவிட முடியாது என்ற பிரதமர், அதற்கு மக்களின் பங்களிப்பு அவசியம் என்றார். தூய்மை இந்தியா திட்டம் வெற்றியடைய மக்களின் ஒத்துழைப்பு தேவை என்றும் அவர் தெரிவித்தார். வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியாவின் சிறப்பு என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.