\
‘அரசியல் ஆதாயத்திற்காக உக்ரைன் அரசுக்கு ட்ரம்ப் லஞ்சம் கொடுத்தார்’ - நான்சி பெலோசி 

‘அரசியல் ஆதாயத்திற்காக உக்ரைன் அரசுக்கு ட்ரம்ப் லஞ்சம் கொடுத்தார்’ - நான்சி பெலோசி 

‘அரசியல் ஆதாயத்திற்காக உக்ரைன் அரசுக்கு ட்ரம்ப் லஞ்சம் கொடுத்தார்’ - நான்சி பெலோசி 
Published on

அரசியல் ஆதாயத்திற்காக அதிபர் ட்ரம்ப் உக்ரைன் அரசுக்கு லஞ்சம் கொடுத்ததாக, அமெரிக்க பிரதிநிதிகள் அவை சபாநாயகர் நான்சி பெலோசி குற்றம்சாட்டியுள்ளார்.

ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் ஜோ பிடன் மற்றும் அவரது மகன் மீது ஊழல் வழக்கு பதிந்து விசாரணை நடத்த வேண்டும் என உக்ரைன் அதிபரிடம் ட்ரம்ப் தொலைபேசி வாயிலாக நிர்பந்தித்தாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ட்ரம்ப் மீது ஜனநாயக கட்சியினர் பதவி நீக்க தீர்மானத்தை முன்மொழிந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

மக்கள் முன்னிலையில் தூதர்கள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில், ‌ஊழல் விசாரணையை முன்னெடுக்கும் வரை ராணுவ உதவியை வழங்க மாட்டேன் என கூறியதை சுட்டிக்காட்டியுள்ள சபாநாயகர் நான்சி பெலோசி அரசியல் ஆதாயத்துக்காக ட்ரம்ப் லஞ்சம் கொடுத்ததாகவே இதனை கருத வேண்டும் என கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com