சீனாவுடன் அனைத்து நிலைகளிலும் விரிவான கூட்டுறவு மற்றும் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வருமாறு வியட்நாம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சீன அதிபர் ஸீ ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார்.
வியட்நாமில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள் சீன அதிபர் ஸீ ஜின்பிங், வியட்நாம் நாட்டின் நாடாளுமன்றச் சபாநாயகரைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களும், வியட்நாம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பரஸ்பரம் அதிக அளவில் நட்புறவை பகிர்ந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். மாகாண ஆட்சி முறை, நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆகியவற்றையும் இரு தரப்பினரும் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.