யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியே வெற்றி பெற்று மகுடம் சூடும் என லண்டன் பூங்காவில் உள்ள கீரிப்பிள்ளைகள் ஆருடம் கணித்துள்ளன.
இங்கிலாந்து மற்றும் இத்தாலி அணிகள் வரும் 11 ஆம் தேதி யூரோ கோப்பைக்கான இறுதிப் போட்டியில் மோதவுள்ளன. 1966 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய சர்வதேச தொடரில் இங்கிலாந்து முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் வெற்றியாளர்களைக் கணிக்க வழக்கமாக விலங்குகளைப் பயன்படுத்துவது போலவே, லண்டன் பூங்காவில் உள்ள கீரிப்பிள்ளைகள் பயன்படுத்தப்பட்டன. அப்போது இங்கிலாந்து அணியே வாகை சூடும் என கீரிப்பிள்ளைகள் கணித்தன.

