\
அமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு: 10 பேர் பலி

அமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு: 10 பேர் பலி

அமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு: 10 பேர் பலி
Published on

அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் பல்பொருள் அங்காடி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காவல் அதிகாரி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொலராடோ மாகாணத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அங்காடிக்குள் நுழைந்து சரமாரியாக சுடத் தொடங்கினார். அதில், அங்கு பணியாற்றும் ஒருவர், ஒரு காவல் அதிகாரி, பொதுமக்கள் என 10 பேர் பலியானதாக கூறப்படுகிறது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்தனர். தாக்குதலுக்கான காரணம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. இது கடந்த ஒரு வாரத்தில் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ள இரண்டாவது துப்பாக்கிச்சூடு என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com