‘இன அழிப்பு நடக்கவில்லை’: ஐநா குற்றச்சாட்டுக்கு மியான்மர் அரசு மறுப்பு

‘இன அழிப்பு நடக்கவில்லை’: ஐநா குற்றச்சாட்டுக்கு மியான்மர் அரசு மறுப்பு

‘இன அழிப்பு நடக்கவில்லை’: ஐநா குற்றச்சாட்டுக்கு மியான்மர் அரசு மறுப்பு
Published on

மியான்மர் ரோஹிங்யா முஸ்லீம்கள் மீதான நடவடிக்கையை மனித குலத்துக்கு எதிரான குற்றமாகவோ, இன அழிப்பாகவோ கருதக்கூடாது என மியான்மர் அரசு கூறியிருக்கிறது.

கடந்த ஆண்டு மியான்மர் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 9 பேரை ரோஹிங்யா இனத்தவர்கள் கொன்றனர். இதைத் தொடர்ந்து ரோஹிங்யா இனப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். வீடுகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதனால் சுமார் 75 ஆயிரம் பேர் நாட்டை விட்டு வெளியேறி வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றனர். இது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் வெளியான ஐநா விசாரணை அறிக்கையில் ரோஹிங்யா முஸ்லீம்களுக்கு எதிராக இன அழிப்பு நடந்திருக்க வாய்ப்பிருப்பதாகக் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com