'2025இல் சீனாவுடன் போர்; வீரர்களே தயார் நிலையில் இருங்கள்'-அமெரிக்க விமானப்படை ஜெனரல்

'2025இல் சீனாவுடன் போர்; வீரர்களே தயார் நிலையில் இருங்கள்'-அமெரிக்க விமானப்படை ஜெனரல்
'2025இல் சீனாவுடன் போர்; வீரர்களே தயார் நிலையில் இருங்கள்'-அமெரிக்க விமானப்படை ஜெனரல்

"2025ஆம் ஆண்டில் சீனாவுடன் போர் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார் அமெரிக்க விமானப்படை ஜெனரல் மைக் மினிஹான்.

உள்நாட்டு போருக்கு பின்னர் சீனாவிடம் இருந்து பிரிந்து சென்ற தைவான் தன்னை ஒரு தனி நாடாக கருதுகிறது. ஆனால் அதனை ஏற்காத சீனா, தைவான் இன்னமும் தங்கள் நாட்டின் ஒரு பகுதியே என கூறி வருகிறது. தைவானை மீண்டும் தன்னுடன் இணைக்க சீனா துடிக்கிறது. இதற்கிடையில் தைவானின் சுதந்திரத்தை ஆதரிக்கும் அமெரிக்கா தைவானுக்கு பல்வேறு வழிகளில் உதவி செய்து வருகிறது. இது தைவானை சொந்தம் கொண்டாடும் சீனாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் இந்த விவகாரத்தில் அமெரிக்கா-சீனா இடையே கடுமையான மோதல் நீடிக்கிறது.

இந்த நிலையில், அமெரிக்க விமானப்படை ஜெனரலான மைக் மினிஹான் 1,10,000 வீரர்களுக்கு தகவல் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில், " 2025-ம் ஆண்டு சீனாவுடன் போர் ஏற்படக்கூடும். அதற்கு வாய்ப்பிருக்கிறது. இதனால் வீரர்கள் அனைவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும். உங்கள் இலக்கைக் குறிவைக்க தயாராகுங்கள். தைவான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் வருகிற 2024 -ம் ஆண்டு அதிபர் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன.

இதனை காரணம் காட்டி அமெரிக்கா திசை திசைதிருப்பப்பட வாய்ப்பிருக்கிறது. இதனால் சீன அதிபர் ஜி ஜின்பிங் தைவானுக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும். என்னுடைய கணிப்பு தவறாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் 2025-ல் சீனாவுடன் போர் செய்ய போகிறேன் என்று என் மனது சொல்கிறது. வீரர்கள் அனைவரும் பயிற்சியில் மிகவும் உறுதியுடன் செயல்பட வேண்டும்'' எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இருப்பினும் அமெரிக்க விமானப்படை ஜெனரல் மைக் மினிஹான் கூறியுள்ளது தங்களின் கருத்துக்கள் அல்ல என விளக்கமளித்துள்ளது அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகன். எனினும் தைவானின் சுதந்திர நிலைப்பாட்டுக்கு அமெரிக்க ராணுவம் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என பென்டகன் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com