\
“ என் அறையில் ஜெர்ரி இருக்கிறது; டாம் உடன் வாருங்கள்” - வைரலான தொலைபேசி உரையாடல்!

“ என் அறையில் ஜெர்ரி இருக்கிறது; டாம் உடன் வாருங்கள்” - வைரலான தொலைபேசி உரையாடல்!

“ என் அறையில் ஜெர்ரி இருக்கிறது; டாம் உடன் வாருங்கள்” - வைரலான தொலைபேசி உரையாடல்!
Published on

தன் அறையில் எலி வந்துவிட்டது என்பதை டாம் அண்ட் ஜெர்ரியோடு ஒப்பிட்டு புகார் தெரிவித்த தொலைபேசி அழைப்பு இணையத்தில் வைரலாகியுள்ளது

லண்டனுக்கு சென்ற சவுதியைச் சேர்ந்த ஒருவர் அங்குள்ள ஹோட்டலில் தங்கியுள்ளார். சரியாக ஆங்கிலம் தெரியவில்லை. இந்நிலையில் அவரது அறைக்குள் அழையா விருந்தாளியாக எலி ஒன்று வந்துள்ளது. எலியை பார்த்த அவர், உடனடியாக ஹோட்டலின் வரவேற்பறைக்கு போன் செய்துள்ளார். அந்த தொலைபேசி உரையாடல் தற்போது வைரலாகியுள்ளது.

அந்த உரையாடலில் பேசிய அந்த நபர், “ எனக்கு ஆங்கிலம் சரளமாக தெரியாது. உங்களுக்கு டாம் அண்ட் ஜெர்ரி தெரியுமா? அந்த ஜெர்ரி என் அறையில் இருக்கிறது. தயவுசெய்து நீங்கள் வரும்போது டாம் உடன் வாருங்கள்” என தெரிவிக்கிறார். அதற்கு பதிலளித்த அந்த ஊழியர், ஆனால் எங்கள் ஹோட்டலில் டாம் இல்லை என தெரிவிக்கிறார்.

இந்த உரையாடல் சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. மேலும் மொழி தெரியாவிட்டாலும் தான் நினைத்த ஒன்றை புத்திசாலித்தனமாக அவர் தெரிவித்துள்ளார் என பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com