\
அமெரிக்காவிற்கு வரும்‌ இஸ்லாமியர்களுக்கு வரவேற்பு

அமெரிக்காவிற்கு வரும்‌ இஸ்லாமியர்களுக்கு வரவேற்பு

அமெரிக்காவிற்கு வரும்‌ இஸ்லாமியர்களுக்கு வரவேற்பு
Published on

இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா வருவதற்கான தடையை நீக்கி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் அமெரிக்காவிற்கு வரும்‌ இஸ்லாமியர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாட்டின் பாதுகாப்பை கருத்‌தில் கொண்டு ஈரான், ஈராக், சோமாலியா, சிரியா உள்ளிட்ட 7 இஸ்லாமி‌ய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு பயணிக்க தற்காலிக தடை விதித்து ட்ரம்ப்‌ உத்தரவிட்டார். தடையால் பாதிக்கப்பட்டு விமான நிலையங்களில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டவர்கள் நீதிமன்ற உத்தரவை அடுத்து சுதந்திரமாக அமெரிக்காவிற்கு வரத் தொடங்கியுள்ளனர். அமெரிக்காவினுள் வருபவர்களை விமான நிலை‌யங்களில் அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். எந்த கெடுபிடியும் இல்லாமல் வழக்கம் போலவே அமெரிக்காவினுள் வந்ததாக 7 இஸ்லாமிய நாடுகளை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com